
மும்பை மாநகராட்சி நிர்வாகம், வீதி ஒன்றிற்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரை சூட்டியுள்ளது.
தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கி அங்கும் பெரும் புகழடைந்தார். ஹிந்தி சினிமாக்களில் அவர் நடித்த திரைப்படங்கள் இன்றும் முக்கியமானவைகளாகவே விமர்சகர்களால் குறிப்பிடப்படுகின்றன.
நல்ல நடிகை என்பதைத் தாண்டி, பாலிவுட் வட்டாரத்திலும் செல்வாக்குடன் வலம் வந்தவர் கடந்த 2018 ஆம் ஆண்டு துபையிலுள்ள நட்சத்திர விடுதியில் உயிரிழந்தார்.
அவர் இறந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், மும்பை மாநகராட்சி நிர்வாகம் ஸ்ரீதேவி வாழ்ந்த லோகசந்த் வாலாவிலுள்ள ஒரு பகுதிக்கு, ’ஸ்ரீதேவி கபூர் சௌக்’ என பெயர் சூட்டியுள்ளது. இதற்கான நிகழ்வில் ஸ்ரீதேவின் கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷி கபூர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: துல்கர் சல்மான் படத்தில் எஸ். ஜே. சூர்யா!
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தியளவில் பிரபலமான நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.