உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ஆபாச விடியோ விவகாரம்: நடிகை ஓவியா புகார்!

ஆபாச விடியோ வைரலானதைத் தொடர்ந்து ஓவியா காவல்துறையில் புகார்...

News image

நடிகை ஓவியா.

Updated On :16 அக்டோபர் 2024, 12:18 pm IST

நடிகை ஓவியா, தன்னுடைய முகத்தை போலியாக சித்திரித்து ஆபாச விடியோ வெளியிடப்பட்டுள்ளதாகக் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் முழு கவனத்தையும் பெற்றவராக இருந்தார். களவாணி படத்தின் மூலம் அழகான நாயகியாக அறிமுகமானர், தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்தார். கலகலப்பு, மதயானைக்கூட்டம் படங்களில் நல்ல நடிப்பையும் வழங்கியிருந்தார்.

ஆனால், சினிமாவில் கிடைத்த புகழெல்லாம் ஒன்றுமில்லை என்கிற அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு மிகப் பெரிய வெளிச்சம் கிடைத்தது. பல லட்சம் ரசிகர்கள் ஓவியாவை பாராட்டிக்கொண்டிருந்த நாள்கள் அவை.

இதையும் படிக்க: எல்ஐகே முதல் பாடல்!

பிக்பாஸுக்குப் பின் 90 எம்எல் என்கிற படத்தில் நடித்தார். அப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. சினிமாவின் கணக்குகள் புரியாது என்பதுபோல், இப்போது மொத்தமாக மார்க்கெட் இழந்த நடிகையாக இருக்கிறார்.

சில நாள்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் ஓவியாவின் ஆபாச விடியோ என ஒரு விடியோ பகிரப்பட்டது. அந்த விடியோவில், பெண்ணின் கையில் டாட்டூ இருந்ததால் ஓவியாதான் என ரசிகர்கள் இந்தியளவில் அவரை வைரலாக்கியதுடன் அந்த விடியோ அதிகளவில் பரப்பப்பட்டது.

விடியோ குறித்த கேள்விகளுக்கு ஓவியாவின் பதில்...

விடியோ குறித்த கேள்விகளுக்கு ஓவியாவின் பதில்...

தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் ஓவியா தன் புகைப்படத்தை வெளியிட்டார். அங்கு, காமெண்ட் செய்ய வந்த ரசிகர்களில் பலரும் அந்த விடியோ குறித்து ஓவியாவிடமே கேட்டனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விடியோ வெளியானால் என்ன? என்பதுபோல் ஓவியா பதிலளித்தார். இதனால், அந்த விடியோவில் இருந்தது ஓவியாதான் என்று ரசிகர்கள் கருதினர்.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் வெளியான இந்த ஆபாச விடியோ தன் முகத்தை போலியாகச் சித்திரித்து உருவாக்கப்பட்டது என காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓவியா புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த புகாரில், விடியோவை உருவாக்கியவர்களின் மீதும் அதைப் பகிர்ந்தவர்களின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.