தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது..! விரைவில் எமர்ஜென்சி ரிலீஸ் தேதி!

நடிகையும் இயக்குநருமான கங்கனா ரணாவத் எமர்ஜென்சி படத்தின் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
 கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்
Published on
Updated on
1 min read

நடிகையும் இயக்குநருமான கங்கனா ரணாவத் எமர்ஜென்சி படத்தின் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனாவுக்கு இதுவரை 4 முறை தேசிய விருதுகள் தரப்பட்டுள்ளன.

எமர்ஜென்சி படத்தினை கங்கனா ரணாவத்தே இயக்கியுள்ளார். உடன் இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தப் படத்தை தணிக்கை செய்யவிடாமல் மிரட்டுவதாக கூறியிருந்தார்.

கங்கனா ரணாவத் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காததற்கு பீபி கொலபாவாலா, ஃபிர்டோஷ் பூனிவாலா அடங்கிய மும்பை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு மத்திய தணிக்கை வாரியத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செப்.25க்குள் தணிக்கைச் சான்றிதழ் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் கெடு விதித்தது.

இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் கங்கனா ரணாவத் கூறியதாவது:

எங்களது எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்ற செய்தியினை மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம். ரிலீஸ் தேதி எப்போது என விரைவில் அறிவிக்கிறோம். ஆதரவுக்கும் பொறுமையாக காத்திருந்தமைக்கும் மிக்க நன்றி என்றார்.

ரிலீஸ் தாமதம் ஏன்?

”இந்திரா காந்தியை கொலை செய்ததை, பிந்தர்வாலேவை காட்டக்கூடாது, பஞ்சாப் கலவரங்களை காட்டக்கூடாதென்றும் தான் மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இவைகளைத் தவிர்த்துவிட்டு வேறு எதைக் காட்டுவதென எங்களுக்கு தெரியவில்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த நாட்டின் நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்” என கங்கனா கூறியிருந்தார்.

சீக்கியர்கள் குறித்து தவறாக காண்பிப்பதாக இந்தப் படத்தை வெளியடக்கூடாதென பலரும் மத்திய தணிக்கை வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com