ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

பள்ளியில் அமைதியான சிறுமி..! ஃபேஷன் குறித்து மனம்திறந்த திரிப்தி திம்ரி!

பிரபல பாலிவுட் நடிகை திரிப்தி திம்ரி ஃபேஷன் குறித்து பேசியதாவது...

நடிகை திரிப்தி திம்ரி.

Updated On :

அனிமல் படத்தில் ‘ஜோயா’ கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை திரிப்தி திம்ரி. 2017இல் போஸ்டர் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானாலும் ‘லைலா மஜ்னு’, ‘புல்புல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் அனிமல் படம் இந்தியா முழுவது புகழைப் பெற்றுத் தந்தது. இவரது அழகான தோற்றம் மட்டுமின்றி கச்சிதமான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றன.

ஏற்கனவே சமூக வலைதளங்களில் திரிப்தி திம்ரி இந்தியாவின் ‘புதிய நேஷ்னல் க்ரஷ்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். படத்தில் வரும் ‘அண்ணி-2’ என்ற வார்த்தையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, ராஜ்குமார் ராவ் உடன் விக்கி வித்யா கா வோக் வாலா விடியோ படத்தில் நடித்துள்ளார். அக்.11 அன்று வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

படத்தின் போஸ்டர்.

படத்தின் போஸ்டர்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ஃபேஷன் குறித்து திரிப்தி திம்ரி கூறியதாவது:

எந்த ஆடைகளை வேண்டுமானாலும் நான் அணிவதில்லை. எனது வழியில் இருந்து நான் மாறுவதில்லை. எனக்கு எது வசதியானதோ அந்த உடைகளை மட்டுமே அணிகிறேன். அதில்தான் தன்னம்பிக்கை இருக்கும். தன்னம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. எனது தனிப்பட்ட ஸ்டைல் என்பது சௌகரியமானது, அழகானது, கிளாசிக்கானது.

நடிகை திரிப்தி திம்ரி

நடிகை திரிப்தி திம்ரி

நான் ஃபேஷனில் ரிஸ்க் எடுப்பேன். ஆனால் அது என்னுடைய சௌகரியமான எல்லைக்குள் மட்டுமே இருக்கும். ஃபேஷன் என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம்; அது சுயத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழி. நீங்கள் அதில் பொய்யாக இருந்தால் மக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். நீங்கள் அணிவதை விரும்பி அணிய வேண்டும்.

பள்ளியில் அமைதியான சிறுமி...

எனது சகோதரி கொடுத்த உடைதான் எனக்கு மிகவும் பிடித்த உடை. பள்ளியில் நான் மிகவும் அமைதியாக கவனத்தைக் கோராத சிறுமியாக இருந்தேன். கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருப்பேன். அதனால் ஆசிரியர்கள் என்னை கண்டுபிடிக்கமாட்டார்கள்.

நான் முதலில் நடிக்கிறேன் எனக் கூறும்போது எனது பெற்றோர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தார்கள்.

உறவினர்களிடம்கூட பேசாத நீ, 200 பேருக்கு மத்தியில் எப்படி நடிப்பாய் எனக் கேட்டார்கள். தன்னம்பிக்கை இருந்தால் எல்லாம் சாத்தியமே என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.