மனசாட்சி என்றால் என்ன? பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெடித்த சர்ச்சை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனசாட்சி என்றால் என்ன? மனசாட்சியுடன் விளையாடுவது என்றால் என்ன? என்ற கேள்வி பெரிதாக வெடித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்குலின் - முத்துக்குமரன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்குலின் - முத்துக்குமரன்படம் |எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனசாட்சி என்றால் என்ன? மனசாட்சியுடன் விளையாடுவது என்றால் என்ன? என்ற கேள்வி பெரிதாக வெடித்துள்ளது.

வார இறுதியில் விஜய் சேதுபதியுடனான உரையாடலின்போது முத்துக்குமரன் எழுப்பிய இந்தக் கேள்வி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 14வது நாளான இன்று (அக். 20) விஜய் சேதுபதியுடன் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் உரையாடும் பகுதி (எபிஸோடு) ஒளிபரப்பானது.

இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உள்ள கேள்விகளை எழுப்பலாம் என விஜய் சேதிபதி கேட்டுக்கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் மனசாட்சி

அப்போது முத்துக்குமரன் எழுந்து நின்று, மனசாட்சியுடன் விளையாடுவது என்றால் என்ன? என்ற கேள்வியை கேட்க விரும்புகிறேன் எனக் கூறினார்.

அதுமட்டுமின்றி, பெண்கள் அணியில் உள்ள எல்லா போட்டியாளர்களும் ஏதோ ஒரு கட்டத்தில் மனசாட்சியுடன் விளையாட மாட்டீங்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

அதனால், மனசாட்சியுடன் விளையாடுவது என்றால் என்ன? என்பதை பெண்கள் அணியினர் விளக்க வேண்டும் என முத்துக்குமரன் கேட்டுக்கொண்டார்.

இதற்கு ரசிகர்கள் பலர் சிரித்தனர்.

ஏனெனில், இதற்கு முந்தைய நாள்களில் விதிகளை மீறிய ஜாக்குலினுக்கு ஆண்கள் அணியினர் தண்டனை வழங்கினர். ஒரு சுவரைப் பார்த்து அமர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. அந்த தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது ஜாக்குலின் அழுதார்.

இதையும் படிக்க | காதலனிடம் அடிவாங்கிய பிக் பாஸ் செளந்தர்யா!

ஆண்கள் அணியில் உள்ள அனைவரும் தன்னை குறி வைத்து பழிவாங்குவதாகவும், தனக்கு மன ரீதியாக இது மிகப்பெரிய சோர்வை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டு ஜாக்குலின் அழுதார்.

ஜாக்குலினுக்கு ஆதரவாஜ தர்ஷிகா, சாச்சனா, பவித்ரா உள்ளிட்டோர் ஆண்கள் அணியிடம் முறையிட்டனர். மனசாட்சியுடன் விளையாடுங்கள் என்று முத்துக்குமார் உள்பட ஆண்கள் அணியினரிடம் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்வியைத்தான் முத்துக்குமார் தற்போது விஜய்சேதுபதி முன்பு எழுப்பினார்.

முத்துக்குமாரின் இக்கேள்விக்கு ஜாக்குலினும், தர்ஷிகாவும் பதில் அளித்தனர். விளையாட்டில் ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு அதன்படி விளையாடுவதுதான் மனசாட்சியுடன் விளையாடுவது என பதில் அளித்தனர்.

மறுமுனையில், இந்த பதில் எனக்கு புரியவில்லை என முத்துக்குமார் கூறியதால் மக்கள் மத்தியில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

இப்போது மட்டுமல்ல, எத்தனை முறை கேட்டாலும் பெண்கள் அணியிடம் இதற்கு பதில் கிடைக்காது என்றும் கிடைத்தால் அதிலிருந்து நான் கற்றுக்கொள்வேன் எனவும் முத்துக்குமார் பகடியுடன் குறிப்பிட்டார்.

சமூகவலைதளங்களில் முத்துக்குமாரின் இந்த கேள்வி பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com