நடிகர் பாலா 4-வது திருமணம்!

நடிகர் பாலா மீண்டும் திருமணம் செய்துகொண்டார்...
நடிகர் பாலா 4-வது திருமணம்!
Published on
Updated on
1 min read

பிரபல நடிகர் பாலா 4-வது திருமணம் செய்துள்ளார்.

இயக்குநர் சிவாவின் சகோதரரான நடிகர் பாலா தமிழில் வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பின்னணி பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். ஆனால், 2008 ஆம் ஆண்டு சந்தனா சதாசிவா என்பவரைத் திருமணம் செய்ததாகவும் அதை மறைத்து தன்னை மணந்து கொண்டதாக அம்ருதா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் 2016-ல் விவாகரத்து பெற்றனர். இந்த இணைக்கு ஒரு மகள் இருக்கிறார்.

அதன்பின், 2021-ல் கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் எலிசபெத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், இருவருக்குமிடையேயான மாற்று கருத்துகளால் பிரிந்தனர்.

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில், சில வாரங்களுக்கு முன் பாலா, தன் முன்னாள் மனைவி மற்றும் மகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறாகக் கருத்து தெரிவித்ததற்காகக் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நடிகர் பாலா தன் முறைப்பெண்ணான கோகிலா என்பவரை முறைப்படி இன்று திருமணம் செய்துகொண்டார். எர்ணாகுளத்தில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com