
நடிகர் அக்ஷய் குமார் குரங்குகளின் உணவிற்காக ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
நடிகர் அக்ஷய் குமார் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவர் நடித்த படங்கள் விமர்சன ரீதியாகவும் பெரிதாகப் பேசப்பட்டவை. இறுதியாக, சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா படத்தில் நடித்திருந்தார்.
அப்படம் சரியான வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் அக்ஷய் குமாரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. அவர் நடித்த சிங்கம் அகைன் நாளை (அக்.31) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியிலுள்ள குரங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 1 கோடியை அக்ஷய் குமார் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆஞ்சநேயா சேவா தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரியா குப்தா, “ நாங்கள் குரங்களுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், அவைகளால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சில கவனமான நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். நடிகர் அக்ஷய் குமார் பரந்த மனம் கொண்டவர். அவர் பெருந்தன்மையுடன் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.