
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது 25ஆவது படமான கால பைரவா படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
நடன இயக்குநராக தொடங்கிய சினிமா பயணத்தில் மைல் கல்லாக 25ஆவது படத்துக்கு முன்னேறியுள்ளார்.
தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மாவின் இயக்கத்தில் தனது 25ஆவது படமான கால பைரவா படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தினை நீலத்ரி புரடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
கால பைரவா படம் பான் இந்திய சூப்பர் ஹீரோ படமாக உருவாகிறது.
நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியானது.
பின்னர் நள்ளிரவில் லோகேஷ் கனகராஜ் கதையில் நடிப்பதாக விடியோ வெளியானது.
ஜி ஸ்குவாடு, பேஷன் ஸ்டீடியோஸ், தி ரூட் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார். பென்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் அறிவிப்பின்போது லோகேஷ், “எங்களது யுனிவர்ஸுக்கு வரவேற்கிறோம்” எனப் பதிவிட்டிருந்தார். அதனால் எல்சியூவில் ராகவா லாரன்ஸ் இருப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
ஏற்கனவே, எல்சியூவில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய வில்லனாக இருக்கிறார்.
இவர்களுடன் ராகவா லாரன்ஸ் இணைந்தால் எல்சியூ மிகப்பெரிய யுனிவர்ஸாக மாற வாய்ப்பிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.