கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘மாமனிதன்’ விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது.
தற்போது, சீனு ராமசாமி அடுத்ததாக ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கியுள்ளார்.
யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் பகுதியில் நடைபெற்று முடிந்தது.
ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவான இது செப்.20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.