நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சி படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர் அஜித்குமார் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில், விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜன், ஹைதராபாத்தில் நீண்ட நாள்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், விடாமுயற்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஆனால், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.