கார்த்திகை தீபம் சீரியல் வேண்டாம்: நடிகர் கார்த்திக் ராஜுக்காக குரல் கொடுக்கும் ரசிகர்கள்!

கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் கார்த்திக் ராஜ் தொடர்ந்து நடித்து வருவது குறித்து அவரின் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் கார்த்திக் ராஜ்
நடிகர் கார்த்திக் ராஜ்இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் கார்த்திக் ராஜ் தொடர்ந்து நடித்து வருவது குறித்து அவரின் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் கார்த்திக் ராஜுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ள நிலையில், கார்த்திகை தீபம் தொடரில் அவருக்கு குறைவான காட்சிகளே கொடுக்கப்படுவதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கார்த்திகை தீபம் தொடரில், ஆர்த்திகாவுக்கு இரட்டை வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது கார்த்திக் ராஜின் முக்கியத்துவத்தை மேலும் குறைக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9 மணிக்கு கார்த்திகை தீபம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகர் கார்த்திக் ராஜ் கார்த்திக் என்ற முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஆர்த்திகா தீபா என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை ஆர்த்திகாவுக்கு கீதா என்ற மற்றொரு வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.

நாயகியின் இரட்டை வேடம்
நாயகியின் இரட்டை வேடம்
நடிகர் கார்த்திக் ராஜ்
நாயகிக்கு திடீர் இரட்டை வேடம்! சினிமாவை விஞ்சும் சின்னத்திரை தொடர்!

புடவை அணிந்து சாந்தமான பெண்ணாக தீபா பாத்திரமும், மார்டன் உடையில் தைரியம் மிகுந்த பெண்ணாக கீதா பாத்திரமும் உள்ளது. இதனால் நடிகை ஆர்த்திகா, தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமைந்துள்ளது.

ஆனால், கார்த்திக் ராஜுக்கு போதிய காட்சிகள் கொடுக்கப்படவில்லை என்றும், தற்போது நாயகிக்கு இரட்டை வேடம் இருப்பதால், கார்த்திக்கிற்கான முக்கியத்துவம் மேலும் குறையும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

நடிகர் கார்த்திக் ராஜ்
நடிகர் கார்த்திக் ராஜ்இன்ஸ்டாகிராம்

இதனால் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான பாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என கார்த்திக் ராஜுக்கு அவரின் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கார்த்திகை தீபம் தொடரில் சிறையிலிருந்து வெளியே வந்து அறிமுகம் கொடுக்கும் சீதாவின் பாத்திரம் அறிமுகமாகும் முன்னோட்ட விடியோவை ஜீ தமிழ் வெளியிட்டது. இந்த விடியோவில் ரசிகர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

ரசிகர்களின் கருத்துகள்
ரசிகர்களின் கருத்துகள்

நடிகர் கார்த்திக் ராஜ் நடித்த செம்பருத்தி தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிக ஆண்டுகள் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையைப் பெற்றது. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற செம்பருத்தி தொடர், டிஆர்பி பட்டியலிலும் நல்ல புள்ளிகளைப் பெற்றிருந்தது.

மேலும், கார்த்திக் ராஜ் நடித்த 'பிளாக் அண்ட் வொயிட்' என்ற திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஜீ தமிழில் பிரீமியர் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com