நாயகிக்கு திடீர் இரட்டை வேடம்! சினிமாவை விஞ்சும் சின்னத்திரை தொடர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நாயகி இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.
ஆர்த்திகா
ஆர்த்திகாஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நாயகி இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.

கார்த்திகை தீபம் தொடரில் தீபா பாத்திரத்தில் நடித்துவந்த ஆர்த்திகா, தற்போது கீதா என்ற பாத்திரத்திலும் அதே தொடரில் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் கவனம் ஈர்த்த தொடர்களில் ஒன்றாக இருக்கும் கார்த்திகை தீபம், டிஆர்பி புள்ளிகளைப் பெறுவதற்காக புதிய புதிய பாத்திரங்களை அறிமுகம் செய்து வருகிறது.

சமீபத்தில் எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் பாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகர் விமல் கார்த்திகை தீபம் தொடரில் முக்கியப் பாத்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.

அந்தவகையில், தற்போது நாயகி ஆர்த்திகாவே மற்றொரு பாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.

ஆர்த்திகா
கார்த்திகை தீபம் சீரியல் வேண்டாம்: நடிகர் கார்த்திக் ராஜுக்காக குரல் கொடுக்கும் ரசிகர்கள்!

இரட்டை வேடத்தில் ஆர்த்திகா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9 மணிக்கு கார்த்திகை தீபம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நாயகனாக கார்த்திக் ராஜ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஆர்த்திகா நடித்து வருகிறார்.

'பிளாக் அண்ட் வொயிட்' படத்தில் கார்த்திக் ராஜ் - ஆர்த்திகா ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதனால் கார்த்திகை தீபம் தொடரிலும் அவர்களுக்கு இடையிலான காட்சிகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ஆர்த்திகா - கார்த்திக் ராஜ்
ஆர்த்திகா - கார்த்திக் ராஜ்யூடியூப்

இந்நிலையில் நடிகை ஆர்த்திகா, கீதா என்ற மற்றொரு பாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். கார்த்திக்கின் மனைவியாக வரும் தீபா என்ற பாத்திரம் இறந்துவிடுவதால், அவரைப் பிரிந்து வாடும் கார்த்திக், மார்டன் உடையில் உள்ள கீதாவை சந்திக்கிறார். இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், கார்த்திகை தீபம் தொடரில் இரட்டை வேடத்தில் அவர் நடிக்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள் சின்னத்திரை டிஆர்பி பட்டியலில் குறிப்பிடத்தகுந்த இடங்களைப் பிடிக்கவில்லை. சன் மற்றும் விஜய் தொலைக்காட்சித் தொடர்கள் மட்டுமே முன்னணி இடங்களில் உள்ளன.

கீதா பாத்திரத்தில் ஆர்த்திகா
கீதா பாத்திரத்தில் ஆர்த்திகாயூடியூப்

இதனால், டிஆர்பியைப் பெறும் வகையில் கார்த்திகை தீபம் தொடரில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்தவகையில் நாயகி ஆர்த்திகாவின் இரட்டை வேடம் குறிப்பிடத்தகுந்த வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெங்காலி மொழியில் ஒளிபரப்பான ’கிருஷ்ணா கோலி’ என்ற தொடரைத் தழுவி தமிழில் 'கார்த்திகை தீபம்' தொடர் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.