
நடிகை சாய் பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரேமம் படத்தில் அவர் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
சாய் பல்லவியின் சகோதரியான நடிகை பூஜா கண்ணன் தமிழில் வெளியான சித்திரை செவ்வாணம் படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
இந்தாண்டு ஜனவரி 21இல் வினீத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் சாய் பல்லவியின் தங்கை பூஜாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் நடிகை சாய்பல்லவியின் புகைப்படங்கள் நடனமாடிய விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் அமரன் படத்திலும் தெலுங்கில் தண்டேல் படத்திலும் நடிக்கிறார்.
கார்கி, விராட பருவம் படத்துக்காக தேசிய விருது கிடைக்காதது குறித்து சாய் பல்லவி ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்கள்.
சாய் பல்லவி ரன்பீர் கபீருடன் இணைந்து ராமாயணம் படத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள அமரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வெளியாகவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.