மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விக்ராந்த் மாஸ்ஸி தொலைக்காட்சிகளில் நடித்து சினிமாவுக்கு வந்தவர். 2013இல் அறிமுகமான இவரது லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா, சாப்பக், மும்பைக்கர் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
கடைசியாக விக்ராந்த் மெஸ்ஸி நடிப்பில் திரையரங்கில் வெளியான டுவெல்த் ஃபெயில் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
சமீபத்தில் நடிகை டாப்ஸியுடன் பிர் ஆயி ஹசீன் தில்ரூபா என்ற படம் நெட்பிளிக்ஸில் வெளியானது.
இந்நிலையில் செக்டர் 36 என்ற புதிய படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி நாயகனாக நடித்துள்ளார். ஆதித்யா நிம்பால்கர் இயக்கியுள்ள இந்தப் படத்த மட்டோக் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி சைக்கோ கொலையாளியாக நடித்துள்ளார். இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் செப்.13ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ஆகஸ்ட் மாதம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.