ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள பாலிவுட் படம் ரூ.750 கோடியை நெருங்கியுள்ளது.
2018இல் வெளியான ஸ்ட்ரீ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர். பங்கஜ் திரிப்பாதி, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தை அமர் கௌசிக் இயக்க ஜியோ ஸ்டுடியோஸும் மட்டோக் பிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ளது.
வசூல் சாதனை
கடந்த ஆக.15ஆம் தேதி வெளியான இந்தப் படம் வசூலில் கலக்கி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.750 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 நாள்களுக்கு முன்புவரை ரூ.593 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ராஜ்குமார் ராவ் படங்களில் இதுதான் அதிகமாக வசூலித்த திரைப்படமாக இருக்கிறது.
இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த இந்திய படங்களின் வரிசையில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.