
நடிகர் ஜெயம் ரவி மனைவியைப் பிரிய விவாகரத்துக் கோரி மனு அளித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தற்போது, ஜெயம் ரவி பிரதர், காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்புக்கு இடையே குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்வார். இதன் புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்.
இதற்கிடையே சில மாதங்களாக, ஜெயம் ரவியும் - ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவரும் விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின.
இந்த நிலையில், நேற்று (செப். 9) ஜெயம் ரவி தன் மனைவியைப் பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தது உறுதியானது.
தற்போது, நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாராம். இந்த வழக்கு அக்டோபர் 10 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகத் தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.