
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் மகன்கள் குறித்த பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘3’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, வை ராஜா வை படத்தை இயக்கினார். அது, ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப்படமாகியது.
இறுதியாக இயக்கிய லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதற்கிடையே, நடிகரும் தன் கணவருமாகிய தனுஷை பிரிவதாக அறிவித்தார். தற்போது, இருவரும் வெவ்வேறு வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த இணைக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் சிறுவனுக்கு அவனது பொம்மைகள் வழியனுப்புவது போன்ற புகைப்படத்துடன், ‘இதுவே முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் புகைப்படங்களில் கனமான ஒன்று’ என ஒரு கணக்கிலிருந்து பதிவிடப்பட்டிருந்தது.
அதைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ”மழலையர் பள்ளியோ... உயர்நிலை பள்ளியோ... இதே கதைதான். என் மகன்கள் இப்போதும் பொம்மைகளுடன் விளையாடுகின்றனர். சில விஷயங்கள் மாறுவதேயில்லை. இந்தக் கதாபாத்திரங்கள் உணர்ச்சிப்பூர்வமானவை..” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.