மலைக்கா அரோராவின் தந்தை உடல் கூறாய்வு: காவல்துறையினர் அதிர்ச்சி தகவல்!

நடிகை மலைக்கா அரோராவின் தந்தை உடல் கூறாய்வு குறித்து காவல்துறையினர் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர்.
தந்தையுடன் நடிகை மலைக்கா அரோரா.
தந்தையுடன் நடிகை மலைக்கா அரோரா.
Published on
Updated on
1 min read

நடிகை மலைக்கா அரோராவின் தந்தை உடல் கூறாய்வு குறித்து காவல்துறையினர் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர்.

நடிகை மலைக்கா அரோராவின் தந்தை அனில் மேத்தா (62) தற்கொலை செய்தது அதிர்ச்சியளித்தது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. வயதானாலும் அன்றாடம் உடற்பயிற்சி, யோகா என இன்றும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் தோற்றத்திலேயே இருக்கிறார். அடிக்கடி, இணையத்தில் வைரலாவார்.

தந்தையுடன் நடிகை மலைக்கா அரோரா.
பிரசாந்த் நீல் கதை! பஹீரா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இவரும் நடிகர் அர்ஜுன் கபூரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகத் தகவல் வெளியானது.

மும்பை மேற்கு பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மலைக்கா அரோராவின் தந்தை அனில் அரோரா 6-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினர். இந்திய வணிகக் கப்பல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனில் மேத்தா நீண்ட நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இந்த சூழலில் அவர் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையுடன் நடிகை மலைக்கா அரோரா.
உடற்பயிற்சி, படப்பிடிப்பு, சிகிச்சை...! சமந்தாவின் ஒருநாள் நிகழ்ச்சி நிரல்!

உடல் கூறாய்வு விவரம்

அனில் மேத்தாவின் உடல் கூறாய்வு புதன்கிழமை இரவு 8 மணிக்கு மும்பையிலுள்ள மருத்துவமனையில் நடைபெற்றிருக்கிறது. அதில், ’பல்வேறு காயங்கள்’ இருப்பதாக காவல்துறையினர் ஆங்கில ஊடகத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

தனது தந்தை மறைவுக்கு மலைக்கா அரோரா, “எனது தந்தை அனில் மேத்தா, இறப்பை சோகத்துடன் அறிவிக்கிறோம். அவர் அன்பான கணவர், அர்ப்பணிப்பான தாத்தா, அழகிய மனமுடையவர், சிறந்த நண்பராக இருக்கிறார். இந்த இழப்பு எங்களது குடும்பத்துக்கு மிகப்பெரிய இழப்பு. இந்த நேரங்களில் எங்களது தனியுரிமைக்கு மரியாதை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com