பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிரசாந்த் நீல் கதை! பஹீரா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹொம்பாலே ஃபிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹீரா படத்தின் போஸ்டர்.

Published On :

கேஜிஎஃப், காந்தாரா, சலார் ஆகிய படங்களை தயாரித்துள்ள ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பஹீரா படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் டாக்டர் சூரி இயக்குகிறார்.

யார் இந்த இயக்குநர் டாக்டர் சூரி?

கேஜிஎஃப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீலின் பஹீரா கதையை இயக்கியுள்ளார் இயக்குநர் டாக்டர் சூரி. தில்லியில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். எலும்பு அறுவைச் சிகிச்சைப் பிரிவில் மேற்படிப்பும் முடித்துள்ளார்.

சினிமா மீதான ஆர்வத்தினால் 2012இல் நடிகர் யஷ்ஷை வைத்து லக்கி எனும் படத்தினை இயக்கியுள்ளார். 

இவர், பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் உருவான சலார் -1 படத்தில் வசனம் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஸ்ரீமுரளி?

இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்துள்ளார். இவர் பிரசாந்த் நீலின் தங்கையை திருமணம் செய்துள்ளார். பிரசாந்த் நீலின் முதல் படத்தின் (உக்ரம்) நாயகனும் இவர்தான்.

கன்னடாவில் கண்டி, உக்ரம் ஆகிய படங்களின் மூலம் மிகவும் கவனம் பெற்ற நடிகராக அறியப்படுகிறார் ஸ்ரீமுரளி. 

பிரசாந்த் நீல் உடன் நடிகர் ஸ்ரீமுரளி.

பிரசாந்த் நீல் உடன் நடிகர் ஸ்ரீமுரளி.

ரிலீஸ் தேதி

கே.ஜி.எஃப் படத்தின் மேக்கிங் சாயல் படத்தின் டீசரில் காண முடிகிறது. ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்தால் அது சிறப்பான படமாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் இந்தப் படம் வரும் அக்.31ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

பஹீரா படத்தின் போஸ்டர்.

பஹீரா படத்தின் போஸ்டர். - படம்: ஹொம்பாலே ஃபிலிம்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.