'வாக்கப்பட்ட ஊர்ல எந்த திசையும் புரியல..’ கவனம் ஈர்க்கும் கோழிப்பண்ணை செல்லதுரை பாடல்!
கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின், ’பொன்னான பொட்டபுள்ள’ பாடல் கவனம் ஈர்த்துள்ளது.
இயக்குநர் சீனு ராமசாமி ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கியுள்ளார். அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் பகுதியில் நடைபெற்று முடிந்தது.
திரைவெளியீட்டு முன்பாகவே, ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.
அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவான இது செப்.20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ’பொன்னான பொட்டப்புள்ள’ பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். என். ஆர். ரகுநந்தன் இசையமைப்பில் வைரமுத்து வரிகளில் ஆனந்த் அரவிந்த்தாக்சன் மற்றும் சைந்தவி பாடிய இந்த மெல்லிசை பாடல் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.