
சென்னையைச் சேர்ந்த ரெஜினா (33) தமிழில் கண்டநாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை, கான்ஜூரிங் கண்ணப்பன் படங்களில் நடித்திருந்தார்.
அடுத்தடுத்த படங்கள்:
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது, அஜித்தின் விடா முயற்சி படத்திலும் நடித்து வருகிறார்.
செக்ஷன் 108, பிளாஸ்பேக் படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. ஜாட் எனும் ஹிந்தி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
உட்சவம் எனும் தெலுங்கு படம் நேற்று (செப்.13) வெளியாகியது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அர்ஜுன் சாய் இயக்கியுள்ளார். இதில் பிரகாஷ்ராஜ், திலீப் பிரகாஷ் நடித்துள்ளார்கள்.
சந்தீப் கிஷன், சாய் தரம் தேஜ் உடன் காதலிப்பதாக வதந்திகள் வந்தன. ஆனால், அவர்கள் நண்பர்கள் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ரெஜினா பேசியதாவது:
காதல் அனுபவம்
எனது வாழ்க்கையில் பல நபர்களுடன் காதலில் இருந்துள்ளேன். நான் ஒரு சீரியல் டேட்டர் (நீண்ட காலமாக உறவில் இல்லாமல் மாறிக்கொண்டே இருப்பவர்கள்). ஆனால், தற்போது அதிலிருந்து சற்று ஓய்வு பெற்றுள்ளேன்.
இதையும் படிக்க: அடுத்த வாரம் (செப்.20) 8 தமிழ்ப் படங்கள் ரிலீஸ்!
நான் மிகவும் நேர்மையானவர். எனக்கு பல முன்னாள் காதலர்கள் இருந்திருக்கிறார்கள். எனது பெற்றோர்கள் கேட்டபோதும் நான் இதைக் கூறியுள்ளேன். என்னால் பொய் சொல்லமுடியாது.
உறவில் இருப்பவர்களுக்கு பொறுப்பு இருக்க வேண்டும். அன்பும் மரியாதையும் அதிகமாக எதிர்பார்ப்பேன். ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்தக் குணம் இல்லாவிட்டால் என்னுடன் பழக முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.