2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் இயக்குநர் சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநர் சங்கத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நிதி உதவி.

Published On :

நடிகர் ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநர் சங்கத்திற்கு ஒவ்வொரு வருடமும் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

தனுஷை வைத்து இயக்கிய 3 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கடுத்து வை ராஜா வை படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கடைசியாக, ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படம் வெளியானது. மிகவும் மோசமான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் இன்னும் எந்த ஒரு ஓடிடியிலும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர்கள், உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 லட்சம் கல்வி உதவி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

இதற்கான முதற்கட்டமாக 2024ஆம் ஆண்டிற்கு நேற்று (செப்.13) ரூ.5 லட்சத்தை சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமாரிடம் வழங்க செயலாளர் பேரரசு , பொருளாளர் சரண் , பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

நிர்வாகிகள் இயக்குனர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.