தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

எது சிறந்த படம்? நந்தன் பட விழாவில் ஹெச்.வினோத் அதிரடி!

இயக்குநர் ஹெச்.வினோத் சசிகுமாரின் நந்தன் படத்தைப் பாராட்டி பேசியுள்ளார்.

நந்தன் பட விழாவில் ஹெச்.வினோத்...

Published On :

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ஹெச்.வினோத். அஜித்துடன் தொடர்ச்சியாக 3 படங்களை இயக்கியுள்ளார். அடுத்து விஜய்யை வைத்து இயக்கிறார்.

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.

வெற்றி, தோல்வியென சென்ற அவர் நடிப்பு வாழ்க்கையில் இறுதியாக வெளியான ‘அயோத்தி’ ’கருடன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

தற்போது நந்தன் படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் செப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படம் குறித்து ஹெச்.வினோத் பேசியதாவது:

என்னைப் பொருத்தவரையில் எது நல்ல படம் என்றால் பெரிய பட்ஜெட் கொண்ட படமோ பெரிய நடிகர்கள் நடிக்கும் படமோ அல்லது பாக்ஸ்-ஆபிஸ் வசூலிக்கும் படங்களோ அல்ல. ஒரு மனிதனை இன்னும் மேம்பட்ட மனிதாக மாற்றும் அல்லது மாற்ற முயற்சிக்கிற படங்களே சிறந்த படங்களாகும். நந்தன் சிறந்த படம். அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளியுங்கள் என்றார்.

ஹெச்.வினோத் இயக்கும் விஜய்யின் 69 பட அறிவிப்பு நாளை (செப்.14) மாலை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.