
நகைச்சுவை விருந்து - மொத ராத்திரி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ்!
மொத ராத்திரி படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவிதுள்ளதாவது...

கார்த்திக் சுப்புராஜ் - படம் - எக்ஸ்
மொத ராத்திரி படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அதனை ”நகைச்சுவை விருந்து” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ’மொத ராத்திரி’.
ஒரே இரவில் நடக்கும் கதையாக எழுதப்பட்டிருந்தாலும் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றதுடன் இயக்குநரின் முதல் திரைப்படம் போன்றே தெரியவில்லை என்கிற விமர்சனத்தையும் இந்தப் படம் பெற்றுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திரையரங்குகளில் அரங்கேறும் இந்த நகைச்சுவை விருந்தை தவறவிடாதீர்கள்.
நகைச்சுவையும் உணர்ச்சிகளும் சரியான அளவில் நிறைந்து, சிறப்பாக எழுதப்பட்டு இயக்கப்பட்ட ஒரு குடும்ப நாடகம் இது. அறிமுக இயக்குநர் ராஜாகருப்பசாமி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
புதிய நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ரிஷிகாந்த் ஒரு அற்புதமான திறமையாளர். நான் பணியாற்றிய நடிகர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர். அவரது 'ஹீரோ' பயணம் ஒரு சிறப்பான தொடக்கத்துடன் தொடங்கியிருப்பதைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல வரவிருக்கின்றன என்று கார்த்தி சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்.
Don't miss this laughter riot in theatres... ðð»#ModhaRathiri is a well written and directed family drama that's filled with comedy and emotions in right mix... Well done debutant director #RajaKaruppasamy and whole new crewððð
— karthik subbaraj (@karthiksubbaraj) August 23, 2026
Superbly performed by whole new cast ððð⦠pic.twitter.com/OxUanjVjMl
Summary
Director Karthik Subbaraj, sharing his thoughts on the film Motha Rathiri described it as a "comedy feast."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






