அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது! தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் ரங்கசாமி!எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு

ராஜா சம்பவம்! அப்டேட் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

டோரதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா....

Published On :20 ஆகஸ்ட் 2026, 11:11 am IST

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புதிய அப்டேட் கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் தற்போது தன் 10-வது திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நாயகியாக நடித்த இப்படத்திற்கு, “டோரதி” எனப் பெயரிட்டுள்ளனர்.

மதுரையைக் களமாக வைத்து உருவான இப்படத்தில் நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் தரத்துடன் இதன் உருவாக்கம் அமைந்துள்ளது.

Story image

இசைஞானி இளையராஜா இசையமைத்து வரும் திரைப்படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் இருக்கிறது. காரணம், கார்த்திக் சுப்புராஜ் போன்ற நவீன பாணியில் ஸ்டைலாக கதை சொல்லும் படைப்பாளிகள் படத்திற்கு இளையராஜா எப்படி இசையமைக்கிறார் என்பதில் பலருக்கும் ஆர்வம் உள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘ராஜா சம்பவம்’ என முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இசைவெளியீட்டு நிகழ்வையும் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Karthik Subbaraj shared an update on the film Dorothy, featuring music composed by Ilaiyaraaja.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.