
தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இதில் ஸ்வாஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணனன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்தப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: எமர்ஜென்சி ரிலீஸ் தாமதம்... மிகுந்த தனிமையில் கங்கனா ரணாவத்!
அட்டக்கத்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தினேஷ். விசாரணை படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.
தற்போது, இந்தப் படத்தினை கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி பார்த்து பாராட்டியுள்ளார். அவர் பேசியதாவது:
லப்பர் பந்து படம் பார்த்தேன். மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தது. தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். கிரிக்கெட்டை மையப்படுத்தி அற்புதமாக எடுத்துள்ளார்கள்.
ஊரில் விளையாடும் கிரிக்கெட்டை மிகவும் அற்புதமாக படம் பிடித்துள்ளார்கள். நானும் ரப்பர் பந்து, டென்னிஸ் பந்து விளையாடித்தான் கிரிக்கெட் விளையாடி வந்திருக்கிறேன். அதனால், என்னால் எல்லாவற்றையும் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. அற்புதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.
தமிழ்ப் படங்களில் இந்தப்படம் நன்றாக மதிப்பிடப்படுமெனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.