பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

தனுஷ் 52: தயாரிப்பு நிறுவனம் அளித்த அப்டேட்!

நடிகர் தனுஷின் 52ஆவது படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ்

Updated On :

நடிகர் தனுஷின் 52ஆவது படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது 50ஆவது படமான ராயன் படத்தினை தானே இயக்கி நடித்திருந்தார். துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

51ஆவது படம்

கமர்ஷியல் ரீதியாக ராயன் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் படத்துக்கு அடுத்து 51ஆவது படமாக தெலுங்கில் குபேரன் படத்தில் நடித்து வருகிறார்.

குபேரன் படத்தினை சேகர் கம்முலா இயக்குகிறார். இதில் ராஷ்மிகா நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

52ஆவது படம்

இந்தப் படத்துக்கு அடுத்து 52ஆவது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தினையும் தனுஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் டாவ்ன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படத்தினை யார் இயக்குகிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை. ஏற்கனவே தனுஷ் இளையராஜா பயோப்பிக்கிலும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.