நிகழ்ச்சித் தொகுப்பாளராக 16 ஆண்டுகளை நிறைவு செய்த அஞ்சனா!

கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், வாழ்த்துகள், ஃப்ரியா விடு ஆகிய நிகழ்ச்சிகள் அஞ்சனாவின் பிரலமடைந்த நிகழ்சிகள்.
Anjana Rangan
அஞ்சனா ரங்கன்இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடிகை அஞ்சனா 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், வாழ்த்துகள், ஃப்ரியா விடு ஆகிய நிகழ்ச்சிகள் அஞ்சனா தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சிகளாகும்.

ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில், மக்களால் மிகவும் விரும்பப்படும் பெண் தொகுப்பாளர்கள் பட்டியலில் அஞ்சனா இடம்பெற்றிருந்தார்.

பிரபலமடைந்த நிகழ்ச்சிகள்

சென்னையைச் சேர்ந்த அஞ்சனா கல்லூரிப் படிப்பை முடித்ததும் 2008ஆம் ஆண்டு மிஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியே அவர் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக்கியது.

சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் பொழுதுபோக்குப் பிரிவில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பல்வேறுவிதமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

2010-ல் பாட்டு.காம், 2011-ல் பாட்டு புதுசு, 2012-ல் நம்ம ஸ்டார், 2013-ல் பாக்ஸ் ஆபிஸ், 2014-ல் கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், 2014-ல் டான்ஸ் ஜோடி டான்ஸ், 2015-ல் நீங்களும் நாங்களும், 2017-ல் ஃபிரியா விடு, 2018-ல் வாழ்த்துகள் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இதில், 2013 முதல் 2017 வரை நட்சத்திர ஜன்னல் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை பலரால் அங்கீகரிக்கப்பட்டவை. இதன்மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் அவர் சேர்த்தார்.

சக நிகழ்ச்சித் தொகுப்பாள்களுடன் அஞ்சனா
சக நிகழ்ச்சித் தொகுப்பாள்களுடன் அஞ்சனா

திருமணமும் நிகழ்ச்சிகளும்

2016ஆம் ஆண்டு சந்திரன் என்பவரை அஞ்சனா திருமணம் செய்துகொண்டார். பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நாயகனாக நடித்தவர் சந்திரன்.

கணவர் மற்றும் குழந்தையுடன் அஞ்சனா
கணவர் மற்றும் குழந்தையுடன் அஞ்சனாஇன்ஸ்டாகிராம்

பின்னர். 2018 ஆம் ஆண்டில் குடும்ப விவகாரம் காரணமாக தனிப்பட்ட முறையில் ஓய்வு எடுத்துக்கொண்டார். அதன்பிறகு 2019 ஆம் ஆண்டு ஜீனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தார்.

2019ஆம் ஆண்டு மிகவும் பிரபலமான தொலைக்காட்சிப் பெண் என்ற பிரிவில் 15வது இடம் பிடித்தார். 2020-ல் 11வது இடத்தில் இருந்தார்.

இதுமட்டுமின்றி திரைப்பட நிகழ்ச்சிகளையும் அஞ்சனா தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் புஷ்பா படத்தின் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com