ஜோவிதா லிவிங்ஸ்டன்
ஜோவிதா லிவிங்ஸ்டன்இன்ஸ்டாகிராம்

புதிய தொடரில் நடிக்கும் லிவிங்ஸ்டன் மகள்!

நடிகர் லிவிங்ஸ்டன் மகள் புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Published on

நடிகர் லிவிங்ஸ்டன் மகள் புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அருவி, பூவே உனக்காக ஆகிய தொடர்களில் நடித்துள்ள நிலையில், தற்போது புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என் புருஷன் குழதை மாதிரி, சுந்தரப் புருஷன், சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும், சில திரைப்படங்களில் காமெடி நடிகராவும் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் லிவிங்ஸ்டன்.

லிவிங்ஸ்டன் மகளுக்கு புதிய வாய்ப்பு

நடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகளான ஜோவிதா லிவிங்ஸ்டன் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பான பூவே உனக்காக தொடரில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ஒளிபரப்பான அருவி தொடரில் நாயகியாக நடித்து புகழ் பெற்றார்.

கன்னட மொழித் தொடரான 'கஸ்தூரி நிவாசா' என்ற தொடரின் கதைக்கருவை மையமாக வைத்து அருவி தொடர் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

இரு தொடர்களும் முடிந்த நிலையில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த ஜோவிதா, அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்.

படிக்க | 3 மொழிகளில் நாயகியாக நடிக்கும் சீரியல் நடிகை!

அருவி, பூவே உனக்காக தொடர்கள்..
அருவி, பூவே உனக்காக தொடர்கள்..இன்ஸ்டாகிராம்

இவர் பதிவேற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறுவது வழக்கம்.

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடரில் ஜோவிதா நடிக்கவுள்ளார். இந்தத் தொடர் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஜகதாத்ரி தொடரின் மறு உருவாக்கம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஜோவிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜோவிதா லிவிங்ஸ்டன்
ஜோவிதா லிவிங்ஸ்டன்இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com