3 மொழிகளில் நாயகியாக நடிக்கும் சீரியல் நடிகை!

ஒடியா, தெலுங்கு, தமிழ் தொடர்களில் நேரடியாக நாயகியாக நடித்த நடிகை என்ற பெருமையப் பெற்றுள்ளார் ஜாஸ்மின் ராத்.
மூன்று மொழித் தொடர்களில் ஜாஸ்மின் ராத்
மூன்று மொழித் தொடர்களில் ஜாஸ்மின் ராத்இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

ஒடியா, தெலுங்கு மற்றும் தமிழ் சின்னத்திரை தொடர்களில் நேரடியாக நாயகியாக நடித்த நடிகை என்ற பெருமையப் பெற்றுள்ளார் ஜாஸ்மின் ராத்.

சில நடிகைகளின் தொடர்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு மற்ற மாநிலங்களில் ஒளிபரப்பப்படும் நிலையில், ஜாஸ்மின் ராத் நேரடியாக அந்தந்த மொழிகளின் தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் தொடர்களில் சில நடிகைகள் நடித்துள்ளனர்.

மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்த நடிகை செளந்தர்யா ரெட்டி, மலர் தொடரில் நடித்த பிரீத்தி சர்மா, எதிர்நீச்சல் தொடரில் நடித்த மதுமிதா, ரோஜா தொடரில் நடித்த பிரியங்கா நல்காரி போன்ற சிலர் ஒரு மொழித் தொடர்களிலும் நேரடியாக நாயகியாக நடிக்கின்றனர்.

ஜாஸ்மின் ராத் தொடர்கள்

தமிழில் நினைத்தேன் வந்தாய் தொடரில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமனுக்கு ஜோடியாக ஜாஸ்மின் ராத் நடித்தார். வெள்ளந்தியான அப்பாவிப் பெண் நகரத்தில் வந்து அல்லல்படும் காட்சிகளில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.

2019ஆம் ஆண்டு சர்கம் என்ற ஒடியா மொழித் தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மாயா தொடரில் நாயகியாக நடித்தார். பின்னர் மா ஜஹர சாஹா என்ற தொடரிலும் நாயகியானார்.

2023-ல் கிருஷ்ணம்மா கலிபிந்தி இந்தரானி என்ற தெலுங்கு தொடரில் நாயகியாக நடித்தார். 2024-ல் தமிழில் நினைத்தேன் வந்தாய் தொடரில் நாயகியாக நடித்தார். தற்போது அவர் அந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சினிமா நாயகி அபிராபி நடித்து வருகிறார்.

ஜாஸ்மின் ராத் / அபிராமி
ஜாஸ்மின் ராத் / அபிராமிஇன்ஸ்டாகிராம்
மூன்று மொழித் தொடர்களில் ஜாஸ்மின் ராத்
கார்த்திகை தீபம் சீரியல் வேண்டாம்: நடிகர் கார்த்திக் ராஜுக்காக குரல் கொடுக்கும் ரசிகர்கள்!

நடிகை ஜாஸ்மின் ராத், ஒடிஸாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் ஒடியா மொழித் தொடர்களிலும் நடித்து வருகிறார். புவனேஸ்வரில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், அதன் பிறகே உயர்கல்விக்காக மும்பை சென்றார். இதன்மூலம் மிக விரைவில் ஹிந்தி தொடர்களில் நடிக்கலாம் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

மூன்று மொழித் தொடர்களில் ஜாஸ்மின் ராத்
கேரளத்தில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com