எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகை கனிகா விளக்கம் அளித்துள்ளார்.
எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த கனிகா, திடீரென விலகியதற்காக பல்வேறு காரணங்கள் சமுக வலைதளங்களில் பரவிய நிலையில், தற்போது அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான சின்ன திரை விருதுகளில், எதிர்நீச்சல் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கனிகாவிற்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
இவருடன் சிறந்த குணச்சித்திர நடிகர் (மாரிமுத்து), சிறந்த இயக்குநர் (திருச்செல்வம்), சிறந்த வசனம் (ஸ்ரீ வித்யா) உள்ளிட்டப் பிரிவுகளிலும் எதிர்நீச்சல் தொடர், மாநில விருதுகளை வென்றது.
மாநில அரசு விருதுடன்... - படம் - இன்ஸ்டாகிராம்
சிறந்த குணச்சித்திர நடிகைக்கான மாநில அரசின் சின்ன திரை விருது கிடைத்தும், கனிகா எதிர்நீச்சல் தொடரிலிருந்து விலகியது ஏன்? என்ற கேள்வி ரசிகர்களிடம் நிலவியது.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளித்துள்ள கனிகா, தனது மகனுக்காக எதிர்நீச்சல் தொடரில் இருந்து விலகியதாக விளக்கம் அளித்துள்ளார்.
கனிகா பேசியதாவது:
''நடிப்புத் துறைக்கு நான் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பாடல் பாடுவதற்காகச் சென்றபோது, ஒரு பெண் வரவில்லை என்பதால், நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியதாயிற்று. அதில் இரண்டாவது இடத்தையும் பிடித்தேன். என் புகைப்படம் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வெளியானது.
அதன் பிறகே நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஃபைவ் ஸ்டார், எதிரி, டான்சர் என பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஏதேனும் விருது கிடைக்காதா? என ஏங்கியிருக்கிறேன்.

மகனுடன் நடிகை கனிகா - படம் - இன்ஸ்டாகிராம்
ஆனால், திருமணத்துக்கு பிறகு நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்டு நடிக்கும்போது எதிர்நீச்சல் தொடரில் விருது கிடைத்துள்ளது. இதற்கு காரணம் ஈஸ்வரி பாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் திருச்செல்வம்தான்.
தற்போது என் மகன் 10 ஆம் வகுப்பு படிக்கிறான். அவன் அருகில் நான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இதனால், தொடரில் இருந்து விலகியுள்ளேன்.
இது திடீரென எடுத்து முடிவு அல்ல. இந்த முடிவு என் இயக்குநர், சக நடிகர்கள் என அனைவருக்குமே தெரியும். தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் தெரியும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Why Actress Kaniha leave Ethirneechal-2 Serial Actress Kanika explains
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த உள்நாட்டு வீரருக்கான பார்ட் கிங் விருதை வென்றார் ஆண்ட்ரீஸ் கௌஸ்!

என் புதிய வழி; யோகாவால் என்னை நான் உணர்கிறேன்! நடிகை கனிகா

என்ன ஆனது? மெனோபாஸ் குறித்து மனம் திறந்த நடிகை த்ரிஷா!

சாய்பாபா கோவிலில் திருமண நாளைக் கொண்டாடிய கனிகா!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay





