இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
ott
ஓடிடிDin
Updated on
1 min read

திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. ஓடிடியில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

பால சரவணன் மற்றும் காயத்ரி நடிப்பில் வெளியான பேச்சி திரைப்படம், ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(செப். 20) காணலாம்.

பிரபு சாலமனின் உதவியாளர் எஸ்.டி. மணிபாலன் இயக்கத்தில் தீரன், ரேஷ்மா வெங்கடேசன், சார்சலஸ் வினோத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காலா திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(செப். 20) பார்க்கலாம்.

ஹிந்தியில் அபிஷேக் குமார் நடித்து வெளியான பஞ்சாயத் தொடரின் மறு உருவாக்கமாக எடுக்கப்பட்டுள்ள தலைவெட்டியான் பாளையம் வெப் தொடர் அமேசான் பிரைமில் நாளை(செப். 20) வெளியாகிறது.

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த வாழ திரைப்படம், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளில் செப். 23-ல் வெளியாகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் செப்.27ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com