
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
துஷாரா விஜய் ‘சரண்யா’ கதாபாத்திரத்திலும் ரித்திகா சிங் ’ரூபா’ கதாபாத்திரத்திலும் நடிகை மஞ்சு வாரியர் ‘தாரா’ கதாபாத்திரத்திலும் அமிதாப் பச்சன் சத்யதேவ் பாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டிருந்தது.
தற்போது ரஜினியின் பெயர் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க: மொழி இல்லம்... கனவு நிறைவேறியது..! மிருணாளினி ரவி நெகிழ்ச்சி!
லைகா புரடக்ஷன்ஸ் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டு, “ ரஜினியின் பெயரை அவ்வளவு விரைவில் சொல்லிவிடுவோமா? படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெயர் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சமீபத்தில் வெளியாகி 20 மில்லியன் (2 கோடி) யூடியூப் பார்வைகளைக் கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.