நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
செப். 9ஆம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்துள்ளார்.
இரண்டு நாள்களுக்குப் பிறகு ஜெயம் ரவியின் முடிவானது கலந்து ஆலோசிக்காமல் அவரே தன்னிச்சையாக எடுத்தது என்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்
இதையும் படிக்க: மக்காமிஷி பாடலுக்கு நடனமாடிய ஜெயம் ரவி, ஹாரிஸ் ஜெயராஜ்! (விடியோ)
பாடகி கெனிஷாவுடன் தொடர்பு இருப்பதாக வதந்திகள் கிளம்பியிருந்தன. இந்நிலையில் பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வந்திருந்த ஜெயம் ரவியிடம் பத்ரிகையாளர்கள் இது குறித்து கேள்வியை முன்வைத்தனர். அதற்கு ஜெயம் ரவி பேசியதாவது:
நான் ஒன்றேயொன்றுதான் சொல்ல விரும்புகிறேன். இதில் யாரையும் இழுக்காதீர்கள். வாழு வாழவிடு. கெனிஷா 600 மேடைகளில் பாடியுள்ளார்கள். தனியாக நின்று வளர்ந்தவர். பல உயிரைக் காப்பாற்றிய ஹீலர் (குணப்படுத்துபவர்). சான்றிதழ் பெற்ற உளவியலாளர். அவரை இப்படி இழுக்காதீர்கள்.
நானும் கெனிஷாவும் இணைந்து வருங்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் (குணப்படுத்தும் மையம்) அமைக்கவிருக்கிறோம். பலருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அதைக் கெடுக்காதீர்கள். அதை யாரும் கெடுக்கவும் முடியாது. தேவையில்லாமல் அவரை இழுக்காதீர்கள் என்றார்.