பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் கமல் நடிப்பில் உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தக் லைஃப் படக்குழு.

Published On :

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து தக் லைஃப் படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினர்.

களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான கமல்ஹாசன், இதுவரை 233 படங்களில் நாயகனாக நடித்து இந்திய சினிமாவின் தனித்துவமிக்க கலைஞராக இருக்கிறார்.

பல மொழிகளின் முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் கமல்ஹாசன் சினிமாவுக்குச் செய்த பங்களிப்பைப் பற்றி வியந்துகொண்டே இருக்கின்றனர்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடைவடைந்தது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் டப்பிங் பணிகளை மேற்கொண்ட விடியோ வெளியானது.

படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.149.7 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் அடுத்தாண்டு மே மாதம் திரைக்கு வருமென்றும் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் படக்குழுவுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.