நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ்

லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணுக்கு மீண்டும் பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

நடிகர் பிரகாஷ் ராஜ் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு விடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
Published on

நடிகர் பிரகாஷ் ராஜ் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு விடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரத்தில் ‘சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ என்ற அமைப்பை நிறுவ வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ், “நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில்தான் இந்த பிரச்னை நடந்துள்ளது. தயவு செய்து விசாரித்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுங்கள். இப்பிரச்னையை ஏன் தேசிய அளவில் ஊதிப் பெரிதாக்கி அச்சத்தை பரப்புகிறீர்கள். நாட்டில் ஏற்கெனவே போதுமான அளவு வன்முறை பதற்ற சூழல் உள்ளது. மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி” எனக் கூறியிருந்தார்.

இதற்கு பவன் கல்யாண், நடிகர் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடியாக பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

டியர் பவன் கல்யாண் அவர்களே, உங்களது செய்தியாளர் சந்திப்பைப் பார்த்தேன். நான் கூறியதை தவறாகப் புரிந்துக்கொண்டு நீங்கள் பேசியது வியப்பாக இருக்கிறது. வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். அதை முடித்துவிட்டு உங்களது ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கிறேன். அதற்குள், எனது பழைய பதிவுகளைப் பார்த்தால் உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன் என்றார்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11 நாள் பிராயச்சித்த தீக்‌ஷை என்ற பெயரில் விரதத்தை மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com