ஆந்திரத்தில் முக்கியமான நடிகராக இருக்கும் பவன் கல்யாண் தனது ஜன சேனா கட்சியை 2014இல் துவக்கினார். தற்போது ஆந்திரத்தின் துணை முதல்வராக உயர்ந்துள்ளார்.
பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) வெளியாகாமல் தாமதிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஹரி ஹர வீர மல்லு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கும் ஹர ஹர வீரமல்லு படத்தின் அப்டேடினை தயாரிப்பாளர் மெகா சூர்யா புரடக்ஷன்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு இன்று காலை 7 மணிக்கு விஜயவாடாவில் தொடங்கியதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் படம் அடுத்தாண்டு மார்ச் 28ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை விஜயவாடாவில் அமைந்துள்ள துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11 நாள் பிராயச்சித்த தீக்ஷை என்ற பெயரில் விரதத்தை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி!
அதன்படி, இன்று காலை கோயில் படிகளை சுத்தம் செய்யும் பணிகளில் பக்தர்களுடன் ஈடுபட்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் கார்த்தியை லட்டு விவகாரத்தில் கண்டித்திருந்ததும் சமூக வலைதளங்களில் வைரலாவது குறிப்பிடத்தக்கது.