நடிகர் ஜெயம் ரவி.
நடிகர் ஜெயம் ரவி.

அடுத்தடுத்து வெளியாகும் ஜெயம் ரவி படங்கள்!

ஜெயம் ரவியின் புதிய படங்கள் வெளியீடு குறித்து....
Published on

நடிகர் ஜெயம் ரவியின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

செப். 9ஆம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்துள்ளார்.

ஆனால், இந்த விவாகரத்து முடிவு தன்னை ஆலோசிக்காமல் அவரே தன்னிச்சையாக எடுத்தது என்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டதும் ரசிகர்களிடையே பெரிய குழப்பம் ஏற்பட்டது.

நேற்று (செப். 24) சென்னை ஈஞ்சப்பாக்கத்திலுள்ள தன் மனைவியின் வீட்டிலிருக்கும் தன் உடைமைகளை மீட்டுத்தரக் கோரி ஜெயம் ரவி அடையாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சொந்த வாழ்க்கைக்கு இடையே, தன் திரைப்பட பணிகளிலும் ஜெயம் ரவி முழுமையான கவனத்தைச் செலுத்தி வருகிறார். குறிப்பாக, இவர் நடித்துள்ள பிரதர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக இருக்கின்றன. முதலில் பிரதர் வெளியீட்டைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதியின் காதலிக்க நேரமில்லை வெளியாகும் எனத் தெரிகிறது.

அதேநேரம், அறிமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் ஜீனி படத்திலும் தீவிரமாக ஜெயம் ரவி நடித்து வருகிறார். அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இம்மூன்று படங்களும் வெளியாகலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com