ஆட்டை பலியிட்ட ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை விமர்சித்த நடிகை வேதிகா!

ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் ஆட்டை பலிகொடுத்ததுக்கு நடிகை வேதிகா கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
 ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை விமர்சித்த நடிகை வேதிகா.
ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை விமர்சித்த நடிகை வேதிகா.
Published on
Updated on
1 min read

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ‘தேவரா -1’ படத்தினை பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப்படம் இன்று (செப்.27) உலகம் முழுவதும் வெளியானது. கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு சோலோ ரிலீஸாக வரும் ஜூனியர் என்.டி.ஆர். படம் தேவரா என்பதால் அவரது ரசிகர்கள் மூர்க்கமாக கொண்டாடி வருகின்றனர்.

காலை சிறப்புக் காட்சியில் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டத்தின்போது ஆட்டினை பலிக்கொடுத்தனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது. இது குறித்து நடிகை வேதிகா தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:

இது மிகவும் கொடியது. அந்த பாவப்பட்ட குழந்தைக்காக எனது இதயம் ரத்தம் வடிக்கிறது. அதிகப்படியான சித்ரவதை, கொடுமை...யாருக்குமே இது நடக்கக்கூடாது. உலகத்தில் குரலற்று அப்பாயவாக இருக்கும் ஜீவனை வதைக்க எப்படி முடிகிறது?

அந்த அப்பாவியான குழந்தையின் ஆன்மாவுக்காக பிரார்த்திக்கிறேன். கடவுளின் கைகளில் தஞ்சமடைவாயாக. உன்னை காப்பாற்றாத எங்களை மன்னித்துவிடு. ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் இனிமேல் எந்த ஒரு உயிரும் கொல்லப்படக்கூடாது. யாருமே இந்த வன்முறையை ஆதரக்கப்போவதில்லை. அதனால், இதை இதோடு தயவுசெய்து நிறுத்துங்கள் என்றார்.

நடிகை வேதிகாவின் பேட்ட ராப் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com