என்னை இயந்திரமாக மாற்றியதற்கு நன்றி! கார்களை வாங்கிக்குவிக்கும் சீரியல் நடிகை!

என்னை இயந்திரமாக மாற்றியதற்கு நன்றி! கார்களை வாங்கிக்குவிக்கும் சீரியல் நடிகை!

சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
Published on

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ ஜூ தனது கார்களின் பட்டியலில் புதிய காரை வாங்கி இணைத்துள்ளார். சொகுசுக் கார்களை வாங்கிவரும் அவர் தற்போது புதிய காரை தனது பட்டியலில் சேர்த்துள்ளார். 

வெள்ளை நிறத்தில் புதிய சொகுசுக் கார் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், என்னை மனித இயந்திரமாக மாற்றிய ஒவ்வொரு நபருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இனியா தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடிகை ஜெயஸ்ரீ ஜூ நடித்து வருகிறார். இதேபோன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கண்ணெதிரே தோன்றினால் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த இரு தொடர்களிலுமே குறிப்பிடத்தகுந்த நடிப்பை ஜெயஸ்ரீ வழங்கி வருகிறார். கோவையைச் சேர்ந்த இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரிலும் நடித்துள்ளார். 

சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பதிவிட்டு வருவது ஜெயஸ்ரீயின் வாடிக்கை. அந்தவகையில் தற்போது புதிய கார் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ''கொஞ்சம் விடாமுயற்சியும், கொஞ்சம் கூடுதலான முயற்சியும் சேர்ந்து நம்பிக்கையில்லா தோல்வியை தற்போது கொண்டாடக்கூடிய வெற்றியாக மாற்றியுள்ளது. என் பலமே என்னுடைய உறுதித்தன்மைதான். என் வாழ்வில் வந்து என்னை மனித இயந்திரமாக மாற்றிய ஒவ்வொரு மனிதருக்கும் நன்றிகள். என்னுடைய மதிப்பு என்ன என்பதை எனக்கு புரியவைத்துவிட்டுச் சென்ற மனிதர்களுக்கும் என்னுடைய நன்றிகள்'' எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com