ஓய்வு நேரங்களில் ஆன்மிக பயணம் செல்லும் சீரியல் நடிகை!

படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாள்களிலும் சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுக்கும் நடிகைகளுக்கு மத்தியில் நடிகை சம்யுக்தா ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
ஓய்வு நேரங்களில் ஆன்மிக பயணம் செல்லும் சீரியல் நடிகை!
Published on
Updated on
2 min read

சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்துவரும் நடிகை சம்யுக்தா ஆன்மிக பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாள்களிலும் சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுக்கும் நடிகைகளுக்கு மத்தியில் நடிகை சம்யுக்தா ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2022 முதல் சிப்பிக்குள் முத்து தொடர் ஒளிபரப்பானது. இரு தங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் தொடரின் மூலம் இவருக்கான ரசிகர் பட்டாளமும் விரிவடைந்தது. தற்போது சமூக வலைதளத்தில் சம்யுக்தாவை பின்தொடர்வோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

நடிகை சம்யுக்தா
நடிகை சம்யுக்தா

சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர் நடிகை சம்யுக்தா. அவ்வபோது தனது பயண விடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து ரசிகர்களுடன் உரையாடக் கூடியவர். 

தாயுடன் நடிகை சம்யுக்தா
தாயுடன் நடிகை சம்யுக்தா

இதனிடையே தற்போது தனது தாயுடன் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ள புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, வாழ்க்கையில் நடக்கும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் காரணங்கள் உண்டு என்பதை நான் நம்புகிறேன். சில இடங்களில் பாடங்களும் சில இடங்களில் ஆசிர்வாதங்களும் கிடைக்கும். சக்தி, வலிமை, தைரியம், வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை என அனைத்திற்காகவும் கடவுளை நோக்கி வருகிறேன். எனக்கு பலத்தையும் சவால்களை சந்திக்கும் வலிமையையும் கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். எதிர்மறையான விமர்சனங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் (கடவுள்) காட்டிய பாதையில் செல்கிறேன். நான் அதனை நம்புகிறேன். அது என்னை சரியான இடத்திற்கு அழைத்துச்செல்லும். தற்போது கிடைத்திருக்கும் வாழ்க்கை என்னுடைய வேண்டுதலை விட அதிகமானது என சம்யுக்தா குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com