மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இன்றிலிருந்து மோடியின் இந்தப் புகைப்படத்தை பாருங்கள்: கங்கனா பதிவு!

இன்றிலிருந்து மோடியின் இந்தப் புகைப்படத்தை பாருங்கள் என்று கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.

கங்கனா ரணாவத்

Published On :

இன்றிலிருந்து மோடியின் இந்தப் புகைப்படத்தை பாருங்கள் என்று கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.

தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கங்கனா ரணாவத். ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சிறந்த நடிப்பிற்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து ’எமர்ஜென்சி’ படத்தினை தானே தயாரித்து இயக்கி நடித்தார் கங்கனா. பின்னர், ரஜினி நடித்து பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் நடிகை கங்கனாவும் நடித்திருந்தார்.

சமீபத்தில் கங்கனா நடிப்பில் வெளியான தேஜஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், கங்கனா ரணாவத் அவரது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மோடி ஜி நம்மில் ஒருவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் அவரை மிகவும் அசாதாரணமாக்குவது எது? என் கருத்துப்படி, அவரது நோக்கம், உணர்ச்சி மற்றும் செயலின் தீவிரம். 

இன்றிலிருந்து இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள், அவருடைய கண்களைப் பாருங்கள், இது வெறும் தோற்றம்தான் ஆனால் சுடர்விடும், வாளைவிடக் கூர்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.