பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தேசிங்கு ராஜா - 2 போஸ்டர்!

நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் தேசிங்கு ராஜா - 2 படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:35 pm

DIN

சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் விமல், பசங்க படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். களவானி திரைப்படம் இவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்து படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த விலங்கு இணையத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்த புதியத்தொடரில் விமலுக்கு ஜோடியாக பாவ்னி மற்றும் திவ்யா துரைசாமி கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

2013இல் எழில் இயக்கத்தில் வெளியான தேசிங்கு ராஜா திரைப்படம் நகைச்சுவையில் மக்கள் மத்தியில் பிரபலமானது. இதயக்கனி என்ற அவரது பெயரும் சூரியின் நகைச்சுவைகளும் இன்றும் மக்களால் ரசிக்கப்படுகிறது. 

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மே மாதம் படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.