மலையாளத்தில் சிறந்த கதைக்களங்களில் திரைப்படங்களை உருவாக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இறுதியாக வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமும் விமர்சன ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றது.
தற்போது, நடிகர் மோகன் லாலை வைத்து ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைத்திருக்கும் இப்படம் வியாழக்கிழமை வெளியானது.
போர்த்துகீசியர்கள் காலகட்டம், ஒளிப்பதிவு என காட்சிகள் பிரமிப்பைத் தருகின்றன. ஆனால், படத்தின் கதையால் மலைக்கோட்டை வாலிபன் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இப்படம், முதல் நான்கு நாளில் உலகளவில் ரூ.22.5 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மோகன் லால் நடிப்பில் வெளியான படங்களிலேயே கேரளத்தில் அதிக முதல்நாள் வசூலை ஈட்டிய படங்களில் ஒன்றாகவும் மலைக்கோட்டை வாலிபன் இடம்பிடித்திருக்கிறது.
இதையும் படிக்க: எமி ஜாக்சனுக்கு திருமணம்!
இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் விடியோவை இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 7,600 குறைவு! மாலை நிலவரம்!
அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு கையெழுத்து! யார் யாருக்கு எவ்வளவு?
கேப்டனின் குடும்பம் ஒரு கார் வாங்கக்கூட தகுதி இல்லையா? பிரேமலதா அவேசம்!

தேர்தல் முடிந்ததும் வெளியாகும் ஜன நாயகன்?
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

