தென்காசி அழகிப்போட்டியா? எதிர்நீச்சல் நாயகிகள் படத்துக்கு குவியும் விமர்சனங்கள்!!

தென்காசி அழகிப்போட்டியா? எதிர்நீச்சல் நாயகிகள் படத்துக்கு குவியும் விமர்சனங்கள்!!

எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் நடிகைகள் பதிவிடும் படங்களுக்கு வரும் கருத்துகளைக் கொண்டே இந்த பாத்திரங்களின் தாக்கத்தை புரிந்துகொள்ள முடியும்.
Published on

எதிர்நீச்சல் தொடரில் முதன்மை நடித்துவரும் நடிகைகள் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனின் மகளான தர்ஷினி காணமல் போனதைத் தேடும் காட்சிகள் சமீபத்தில் இடம்பெற்று வருகின்றன. அவரைத் தேடும் பணிகளில் ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள அனைவருமே ஈடுபட்டு வருகின்றனர். 

இதனை ஒப்பிட்டு, தர்ஷினியைத் தேடுவதை விட்டுவிட்டு இன்பச்சுற்றுலாவுக்குச் சென்றதைப்போன்று குழுப்படம் எடுக்கிறீர்களா? ஆதி குணசேகரன் உங்களைத் திட்டுவதில் தவறே இல்லை என்பது போன்ற கருத்துகளை (கமென்ட்) ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

எதிர்நீச்சல் தொடரிலிருந்து.. 
எதிர்நீச்சல் தொடரிலிருந்து.. 

சின்னத்திரை தொடரின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களாகவே நிஜவாழ்க்கையிலும் நடிகர்களை ரசிகர்கள் பார்க்கின்றனர் என்பதற்கு இதுபோன்ற கருத்துகளை உதாரணம் எனச் சொல்லலாம். இவை கேலிக்காக மட்டுமே ரசிகர்களால் பதிவிடப்படுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

சில கருத்துகள் தொடர் சங்கிலியாக மாறி ஒவ்வொருவரும் அந்த கருத்தை நீட்டிப்பதைப்போன்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். சிலர் தென்காசி அழகிப்போட்டிக்கு போனீர்களா? என்பதைப் போன்று தரக்குறைவான கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.

நடிகைகள் கனிகா, மதுமிதா, ஹரிபிரியா, பிரியதர்ஷினி
நடிகைகள் கனிகா, மதுமிதா, ஹரிபிரியா, பிரியதர்ஷினி

எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் கனிகா, மதுமிதா, ஹரிபிரியா இசை, பிரியதர்ஷினி ஆகிய நான்கு பேரும் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது எந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் நடிகைகள் பதிவிடும் படங்களுக்கு வரும் கருத்துகளைக் கொண்டே இந்த பாத்திரங்களின் தாக்கத்தை புரிந்துகொள்ள முடியும் என சில ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சில சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சியாக வெளியிடும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட, எதிர்நீச்சல் தொடர் நடிகைகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com