தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி நுட்பமான கதைகளை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின்.
இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
மேலும், நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ வெற்றிப்படமாக அமைந்தது. லியோவிலும் கவனிக்கும்படியாக நடித்திருந்தார்.
தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் டிரெயின் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட மிஷ்கினிடம், ‘நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மிஷ்கின், “விஜய் அரசியலுக்கு வருவது பற்றி பேச எனக்கு எந்த விருப்பமும் இல்லை. 25 ஆண்டுகளாக விஜய்யை எனக்குத் தெரியும். என்னிடம் மிக அன்பாக, மேன்மையாகப் பழகியிருக்கிறார். விஜய் நூறு வயது வரை வாழ வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிக்கிறார்கள். உதயநிதி அரசியலுக்கு வந்தார். என் படப்பிடிப்புக்கு வரும்போது அரசியல் சந்திப்புகளை கவனிப்பார். இன்று, நேரமில்லாமல் பல வேலைகளைச் செய்து வருகிறார். அதை அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். அதுபோல், விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு?” என பதிலளித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல்

காஞ்சி காமாட்சி அம்மனை மலா்கள் தூவி வரவேற்ற இஸ்லாமியா்கள்

இணையவழி மின்கட்டணம், புதிய மின் இணைப்புக்கான பதிவு சேவைகள்: இன்றும், நாளையும் தற்காலிமாக நிறுத்தி வைப்பு

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

