திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தனுஷின் இட்லி கடை: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இட்லி கடை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

இட்லி கடை போஸ்டர்

Updated On :4 ஏப்ரல் 2025, 1:44 pm IST

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராயன் படத்தை இயக்கி நடித்த நடிகர் தனுஷ், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை.

இந்த நிலையில், தனுஷ் தனது அடுத்த படமாக இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் அருண் விஜய், நித்யா மெனன், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இட்லி கடை படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படம் ஏப்ரல் 10 வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படமும் அதேநாளில் வெளியாவதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இட்லி கடை வெளியீட்டில் மாற்றம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

வருகிற அக்டோபர் 1 அன்று இட்லி கடை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜுனாவுடன் இணைந்து தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் ஜூன் 20 திரைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.