
ரெட்ரோ படத்தின் கனிமா பாடலுக்கு நடிகை சாய் தன்ஷிகா நடனமாடியுள்ளார். இந்த விடியோ வைரலாகி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் ‘கனிமா..’ என்ற பாடல் சில நாள்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமூகவலைதளங்களில் இந்தப் பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த டிரெண்டில் நடிகை சாய் தன்ஷிகாவும் இணைந்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளா தன்ஷிகா, "உங்கள் அனைவருக்குமாக கனிமா” எனக் கூறியுள்ளார்.
பேராண்மை, பரதேசி, கபாலி படங்களில் பிரபலமான சாய் தன்ஷிகா கடைசியாக தமிழில் 2021இல் லாபம் என்ற படத்தில் நடித்தார்.
தற்போது, தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்திவரும் சாய் தன்ஷிகா கனிமா பாடலுக்கு நடனமாடியது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு பூஜா ஹெக்டே தமிழில் கதாநாயகியாக நடித்துள்ளதால் ரெட்ரோ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கனிமா பாடல் 15 நிமிட சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.