திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற மர்மர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் நடிகர்கள் ரிச்சி கபூர், தேவராஜ் ஆறுமுகம், யுவனிகா ராஜேந்திரன் நடிப்பில் மார்ச் மாதம் வெளியான ஹாரர் படமான மர்மர் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது.
ஒரு மலைக்கிராமத்தில் கன்னி தெய்வங்களுக்கு பூஜை செய்யவிடாமல் சூனியக்காரி தடுப்பதாக ஊர் மக்கள் நம்புகின்றனர்.
அப்பகுதிக்குள் டாக்குமெண்ட்ரி எடுப்பதற்காக நாயகக் குழு செல்கின்றனர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதை சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாக்கியிருந்தனர்.
இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்று (ஏப். 4) வெளியானது.
இதையும் படிக்க: 2 கோடி பார்வைகளைக் கடந்த குட் பேட் அக்லி டிரைலர்!