குட் பேட் அக்லி டிரைலர் யூடியூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி படம் சரியாக போகாததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.
படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் இரு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், நேற்று இரவு இப்படத்தின் டிரைலர் வெளியானது. அதில், அஜித்தின் இளம் தோற்றம், வசனங்கள் ரசிகர்களைக் கவர்ந்ததால் அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக இப்படம் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர்.
தற்போது, யூடியூபில் டிரைலர் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
இதையும் படிக்க: சரத்குமார் - சண்முக பாண்டியன் படத்தின் அப்டேட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளிதாஸ் - 2 டிரைலர் வெளியானது!

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!

ஹேப்பி ராஜ் டிரைலர்!
20 கோடி பார்வைகளைக் கடந்த ஹுக்கும்!
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

